உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே கரிச்சிபாளையத்தில் வேளாண்மை துறை 'அட்மா' திட்டத்தின் வாயிலாக மல்பெரி சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமில், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் நாமத்துல்லா, வேளாண் துறை திட்டங்கள், மானிய விபரங்கள் குறித்து எடுத்துக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால், பயிர் காப்பீடு பற்றியும், வேளாண் துறை மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார். பயிற்சியில், பட்டு வளர்ச்சி துறை தொழில் நுட்ப உதவியாளர் மோகன்ராஜ், பட்டுப்புழு வளர்ப்புக்கு மல்பெரி செடி வளர்ப்பின் முக்கியத்துவம், மண் ஆய்வு அடிப்படையில் உரம் இடுதல், மாதாந்திர வருமானம் பெற எவ்வளவு ஏக்கர் பயிரிட வேண்டும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்தும், பட்டுப்புழு வளர்ப்பு இடம் காற்றோட்டமாக நல்ல முறையில் பராமரித்தல் குறித்தும் எடுத்துக் கூறினார். பட்டு வளர்ச்சி துறைகள அலுவலர் பர்சனா, உதவி வேளாண்மை அலுவலர் ஜனனி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ