உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்டினுள் வழிந்தோடும் கழிவுநீர்; பயணியர் பாதிப்பு

பஸ் ஸ்டாண்டினுள் வழிந்தோடும் கழிவுநீர்; பயணியர் பாதிப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிதாக தரைமட்ட பாலம் கட்டப்பட்ட நிலையில், அங்கு தேங்கும் கழிவுநீர் திறந்தவெளியில் வழிந்தோடுகிறது.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் மார்க்கமாக, பல மாவட்டங்களுக்கு அதிகப்படியான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டில் பயணியர் கூட்டம் நிறைந்தே காணப்படும்.இந்நிலையில், மழைநீர் வழிந்தோடும் வகையில், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் புதிதாக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், அங்கும் தேங்கும் கழிவுநீர், தற்போது, பஸ் ஸ்டாண்ட் நோக்கி பாய்ந்து வருகிறது.கடும் துர்நாற்றம் காரணமாக, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இது குறித்து, மக்கள் கூறியதாவது: ஏற்கனவே, பழைய பஸ் ஸ்டாண்ட் சுகாதாரமின்றி காணப்படுகிறது. பயணியர் அமர போதிய இருக்கைகளும் கிடையாது.தவிர, கோவை நோக்கி இயக்கப்படும் பஸ் 'ரேக்' பகுதியில், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை பலர் வாடிக்கையாகக்கொண்டுள்ளனர்.இந்நிலையில், தரைமட்ட பாலம் பகுதியில் தேங்கும் கழிவுநீர், பஸ் ஸ்டாண்டினுள் வழிந்தோடுவதால், பயணியர் பாதிக்கின்றனர். அதேபோல, பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டும் வரும் நிலையில், வெயிலுக்கு ஒதுங்க முடியாமல் அவர்கள் திணறுகின்றனர்.கடும் சிரமத்தை எதிர்கொண்ட பின்னரே, ஒவ்வொரும் பயணியும் அவரவர் ஊர் நோக்கி புறப்படுகின்றனர். நகராட்சி சுகாதாரத்துறையினர் முறையாக ஆய்வு செய்து, சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி