உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய போட்டி; பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

குறுமைய போட்டி; பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

பொள்ளாச்சியில் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தங்களது பள்ளிக்கு பெருமை சேர்க்க மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு, கோட்டூர் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதில், மேற்கு குறுமைய அளவிலான போட்டிகள், கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்து நடக்கிறது.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், வாலிபால், த்ரோபால், கபடி, டென்னிகாய்ட் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.பேஸ்கட்பால் போட்டியில், 14வயது மாணவியருக்கான பிரிவில், விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதலிடமும், பி.கே.டி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 17, 19 வயதினருக்கான பிரிவில், லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றது. 17 வயது பிரிவில், அக் ஷயா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றது.மாணவியருக்கான த்ரோ பால் போட்டியில், 14, 17 வயது பிரிவில், புரவிபாளையம் அரசு பள்ளியும், 19 வயது பிரிவில் லதாங்கி பள்ளியும் முதலிடம் பெற்றன. கபடி போட்டியில் 14, 19 வயது பிரிவில், சிவாலிக் பள்ளி, 17 வயது பிரிவில் கிணத்துக்கடவு அரசு பள்ளியும் முதலிடமும் பெற்றன.

கிழக்கு குறுமையம்

கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டிகளை சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைந்து நடத்தி வருகிறது. வாலிபால், கபடி, கோ-கோ என பல்வேறு போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. போட்டிகளை சிறுகளந்தை பள்ளி முதல்வர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.மாணவர் பிரிவு கோ - கோ போட்டியில், 14, 17 வயது பிரிவில், வதம்பச்சேரி எஸ்.சி.எம்., பள்ளி முதலிடம் பெற்றது. 14 வயது பிரிவில், மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளியும், 17 வயது பிரிவில், ஜெ.கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியும், 19 வயது பிரிவில் காளியண்ணன்புதுார் அரசு பள்ளியும் இரண்டாமிடம் பெற்றன.த்ரோ பாலில், 14 வயது பிரிவில், சுல்தான்பேட்டை வெங்கிட்ராஜ் மெட்ரிக் பள்ளி முதலிடமும், கஞ்சம்பட்டி அரசு பள்ளி இரண்டாமிடமும்; 17 வயது பிரிவில், கஞ்சம்பட்டி அரசு பள்ளி முதலிடமும், லட்சுமி நாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 19 வயது பிரிவில், பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.ஹாக்கி போட்டியில், 14வயது பிரிவில், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி முதலிடமும், சிறுகளந்தை வி.வி.எம்., பள்ளி இரண்டாமிடமும்; 17 வயது பிரிவில் லட்சுமிநாயக்கன் பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.19 வயது பிரிவில், பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் அரசு பள்ளி முதலிடமும், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.வாலிபால் போட்டி, 14வயது பிரிவில், வடசித்துார் அரசு பள்ளி முதலிடமும், 17 வயது பிரிவில், லட்சுமிநாயக்கன் பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி, 19 வயது பிரிவில், சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளிகளும் முதலிடம் பெற்றன. 14, 17வயது பிரிவில், செஞ்சேரி மலையாண்டிபாளையம் அரசு பள்ளி இரண்டாமிடமும், 19 வயது பிரிவில் பழனிக்கவுண்டர் அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.கபடி போட்டியில், 17 வயது பிரிவில், இடையர்பாளையம் அரசு பள்ளி முதலிடமும், எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 19 வயது பிரிவில், பழனிக்கவுண்டர் பள்ளி முதலிடமும், சேரிபாளையம் அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.பால்பேட்மிட்டன் போட்டியில், 14 வயது பிரிவில் வதம்பச்சேரி எஸ்.சி.எம்., பள்ளி முதலிடமும், 17 வயது பிரிவில் விஸ்வதீப்தி பள்ளி முதலிடமும், 19 வயது பிரிவில், பழனிக்கவுண்டர் அரசு பள்ளி முதலிடமும் பெற்றன.14, 19வயது பிரிவில் வடசித்துார் அரசு பள்ளி இரண்டாமிடமும், 17 வயது பிரிவில், பொள்ளாச்சி எல்.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

உடுமலை

உடுமலையில், குறுமையம் வாலிபால் போட்டி மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. மாணவியருக்கான போட்டியில், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளிலும், விசாலாட்சி பெண்கள் பள்ளி அணி முதலிடம் பெற்றது.சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில், உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளி, ஜூனியர் பிரிவில் கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளிகள் இரண்டாமிடம் பிடித்தன.மாணவர்களுக்கான வாலிபால் சீனியர் பிரிவில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதலிடமும், உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தது.சூப்பர் சீனியர் பிரிவில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.மாணவர்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டி, உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. போட்டியினை கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார், உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கனிமொழி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பரூக் ஆகியோர் துவக்கி வைத்தனர்.எறிபந்து போட்டியில், மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கொழுமம் ஓம்சக்தி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தது.சீனியர் பிரிவில், கணியூர் பாரதி வித்யா மந்திர் பள்ளி முதலிடமும், ஓம்சக்தி பள்ளி இரண்டாமிடமும்; சூப்பர் சீனியர் பிரிவில் கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடமும், பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, உடுக்கம்பாளையம் உடற்கல்வி ஆசிரியர்கள் கல்யாணசுந்தரம், கணேசன், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சண்முகராஜா செய்திருந்தனர்.மாணவர்ளுக்கான ஹாக்கி போட்டி, உடுமலை நேதாஜி மைதானத்தில் நடந்தது. சூப்பர் சீனியர் பிரிவில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை