மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
கோவை : ஒண்டிப்புதுாரிலிருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்கு செல்லும் மேம்பாலக்கட்டுமானப்பணிகளை வரும், ஆக., இறுதியில் முடிக்க வேண்டும்; தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கலெக்டர் கிராந்திகுமார் எச்சரித்துள்ளார். கோவை ஒண்டிப்புதுாரில் இருந்து, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 27 துாண்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) துவக்கியது. அணுகுசாலைக்கு போதிய இடம் ஒதுக்காததால், அப்பகுதி பொதுமக்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், மேம்பாலப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.2021ல் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்பட்டது. பின், தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேம்பாலப் பணி நிறுத்தி வைக்கப்பட்டதால், நிலுவை பணிகள் மேற்கொள்ள, மறுமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.ஓடுதளத்தில் மூன்று 'டெக்குகளுக்கு ஸ்லாப்', ஒண்டிப்புதுார் பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் ஒண்டிப்புதுார் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி செல்லும் வழித்தடத்தின் இருபக்கமும் தலா, 75 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை மற்றும் சர்வீஸ் சாலை, நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்க, 8.80 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.லோக்சபா தேர்தல் பணிகள் காரணமாக, கட்டட கட்டுமானப்பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. அதனால் ஆக., மாதத்துக்குள் பணிகளை நிறைவு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பார்வையிட்டார் கலெக்டர்
தகவலறிந்த கலெக்டர் கிராந்திகுமார் ஒண்டிப்புதுாரிலிருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ள பாலக்கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். பணிகள் ஏன் தொய்வாக நடந்து வருகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேம்பாலப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசமான வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க வேண்டும்; தவறும் பட்சத்தில் ஒப்பந்ததாரர் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago