| ADDED : ஜூலை 28, 2024 12:56 AM
முதுமை காலத்தில் நமது தோல் பளபளப்பு குறைந்து, சுருங்கி தொங்கி விடும். இந்த பிரச்னையால் ஆண்கள் கவலைப்படுகிறார்களோ இல்லையோ, பெண்கள் நிறைய கவலைப்படுகின்றனர்.தீர்வு சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜனனி.வயதாகும் போது உடலில் உள்ள செல்களுக்கு வயதாவது போல, தோல் சுரப்பிகளுக்கும் வயதாகி விடும். தோலில் சுரக்கும் எண்ணெயும் குறைந்துவிடும். இதனால் தோல் வழியாக பாக்டீரியா, வைரஸ் எளிதில் நுழைந்து விடும்.நம் முன்னோர் இதை தடுக்க, உடலில் எண்ணெய் தேய்ப்பார்கள். இது, சிறிது நேரம் தான் இருக்கும். அதுவே மாய்ஸ்ச்சரைசிங் கிரீம் தேய்த்தால், குறைந்தது 3 மணி நேரம் வரை தோல் வறட்சியடையாமல் இருக்கும். இதனால் தோல் சுருங்குவதை குறைக்கலாம்.40 வயதை கடந்த பெண்கள் சிலர், வெயிலில் சென்று வந்தால் முகத்தில் மங்கு (கருப்பு வடு) ஏற்படும். சிலருக்கு இது தானாக சரியாகி விடும். ஹார்மோன் பிரச்னையால் இது ஏற்படுகிறது. மங்கு மறையாதவருக்கு, சன் ஸ்கிரீன் பயன்படுத்தினால், மறைந்து விடும்.அடி தோலில் மங்கு உள்ளவர்கள், டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் தோல் சுருங்கி, தொங்கி விடும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்தி விட்டால், நல்ல மாற்றம் தெரியும். காற்று மாசு, சூரிய ஒளியால் கூட தோல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சன் ஸ்கிரீன் பாதுகாக்கும்.சத்தான உணவு முறை, துாக்கம், அதிக நீர் குடிப்பது. பழ வகைகள், காய்கறி நமது சருமத்தை பொலிவாக வைக்கும். வெயில் காலங்களில் ஏற்படும் வியர்வையால் கூட, தோல் பிரச்னைகள் வரலாம். முதுமை அடைய துவங்கும் போது, அதிக பெர்ப்யூம் உள்ள சோப்புகளை பயன்படுத்த கூடாது.