மேலும் செய்திகள்
மழையால் சின்னவெங்காயம் அறுவடை பணிகள் பாதிப்பு
15-Aug-2024
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வைகாசி பட்டத்தில் நடவு செய்த சின்னவெங்காயம் உரிய விலை கிடைக்காததால், பட்டறையில் ஏற்றி அடைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இந்தாண்டு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வைகாசி மாதத்தில், தொடர் மழை பெய்ததால், வைகாசி இறுதி முதல் ஆனி மாதம் வரை, சின்னவெங்காயம் நடவு செய்தனர். இந்நிலையில், 60 முதல் 65 நாட்கள் ஆகி விட்டதால், சின்னவெங்காயம் நல்ல விளைச்சல் வந்துள்ளது.இதனையடுத்து, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தற்போது, சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி படுஜோராக நடந்து வருகிறது. விளைச்சல் அமோகமாக வந்துள்ளபோதும், உரிய விலை கிடைக்காததால், அறுவடை செய்த வெங்காயத்தை, பட்டறையில் ஏற்றி அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் கூறுகையில்,இந்தாண்டு, சின்னவெங்காயம், நல்ல விளைச்சல் வந்துள்ளது. இருப்பினும், வாங்க ஆளில்லை. அதனால், கிலோ, 5 முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை, ஆள் கூலிக்கு மட்டுமே சரியாக இருக்கும். இதனால், அறுவடை செய்த சின்னவெங்காயத்தை, பட்டறையில் இருப்பு வைத்து விலை கிடைக்கும்போது, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
15-Aug-2024