| ADDED : ஜூலை 11, 2024 11:18 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் துறை சார்பில், துடியலூர் டியூகாஸ் வளாகத்தில், அட்மா திட்டம் வாயிலாக, மண்வள மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமில், உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால் பேசினார். வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலர் கோமதி எடுத்துக் கூறினார்.மண் மற்றும் நீர் ஆய்வு மைய மேலாண்மை அலுவலர் அருண், மண்ணின் இயற்பியல் தன்மை குறித்து விளக்கினார். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி துரைசாமி, மண்வளத்தை எவ்வாறு காக்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட அளவில் உரம் இடுதல், இயற்கை உரங்களை பயன்படுத்துதல், பசுந்தாள் உரங்களை மடக்கி உழுதல், நுண்ணுயிரிகளை அதிகப்படுத்தும் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், பாக்டீரியா, சூடோமோனஸ், விரிடி, பூச்சி நோய் மேலாண்மைக்கு கோடை உழவு செய்தல் பற்றியும், பச்சை குறியிட்ட மருந்துகளை குறிப்பிட்ட அளவு மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தினார். பயிற்சியில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்களும், உதவி வேளாண்மை அலுவலர்களும் செய்து இருந்தனர்.