உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேலாண்மை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

மேலாண்மை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், தீக் ஷாரம்பம் நிகழ்ச்சியில் 'ஸ்ட்ராடஜிக் பிரில்லியன்ட்ஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, வரவேற்றார். முதலாவது அமர்வில், சிறப்பு விருந்தினராக ரோட்டோரிக் பயிற்சியாளர் ராஜராஜன் கலந்து கொண்டார்.பின், தொழில்முனைவோர் மனப்பான்மை, புதிய கண்ணோட்டத்தில் தொழில் நடத்தும் முறை குறித்து பேசினார்.இரண்டாவது அமர்வில், கிரிபிரகாஷ், சிவஞான செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, விளையாட்டு வாயிலாக கற்க வேண்டிய மேலாண்மை படிப்பு குறித்து பேசினர். இதில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ