உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லோக்அதாலத் சிறப்பு அமர்வு

லோக்அதாலத் சிறப்பு அமர்வு

கோவை:'லோக்அதாலத்' விசாரணையில் பங்கேற்போருக்கு சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை செப்., 14 ல், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார், அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் , கல்வி கடன் , நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை உள்ளிட்ட சிவில் வழக்குகள், நில ஆர்ஜிதம், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. சமரச தீர்வு காண விரும்புவோர் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமர்வில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை