மேலும் செய்திகள்
'பசி போக்குவதே முதல் வழிபாடு'
27-Feb-2025
அன்னுார்; அல்லிகுளம், சத்திய ஞான சபையில், சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னுார் அருகே அல்லிகுளத்தில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிப்., 23ல் சன்மார்க்க கொடியேற்றப்பட்டு, அணையா விளக்கு எனப்படும் சத்தியஜோதி ஞானதீபம் ஏற்றப்பட்டது.இதையடுத்து, ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மதியம் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு சத்திய ஞான தீபத்துக்கு வழிபாடு நடந்தது. வள்ளலார் அகவல் பாராயணம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.சன்மார்க்க சங்க தலைவர் வெள்ளிங்கிரி பேசுகையில், ''வள்ளலாரின் போதனைகளை பின்பற்றினால், வாழ்வில் துன்பம் இருக்காது. மனதில் வெறுப்பு, கோபம், பொறாமை உள்ளிட்ட அனைத்து தீய குணங்களும் நீங்கிவிடும். தினமும் வள்ளலாரின் வாசகங்களை வாசிக்க வேண்டும்,'' என்றார்.செயலாளர் பிருந்தா, பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Feb-2025