மேலும் செய்திகள்
தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு
05-Mar-2025
அன்னுார்; 'சிந்தித்துப் பேசுவதே சிறப்பு தரும்,' என, தமிழ்ச் சங்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.கவையன்புத்துார் தமிழ்ச்சங்கம் சார்பில், தமிழ்ச்சங்க விழா கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில் நடந்தது. பணி நிறைவு தலைமை ஆசிரியை காளியம்மாள் வரவேற்றார்.பாரதியார் பல்கலை தமிழ் துறை பேராசிரியை தங்கமணி தலைமை வகித்து பேசுகையில், ''நாம் பிறந்த மண்ணைப் பற்றிய சிறப்பையும் வரலாறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆய்வு நோக்கில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார். கீர்த்தனா, கேசவதர்ஷினி ஆகியோர் பேசினர்.பேராசிரியர் அரியநாயகம் எழுதிய 'பாமலர்' என்னும் நுாலை சாந்தி அறிமுகம் செய்து பேசினார்.புலவர் கீதா தயாளன், பேசுகையில், ''நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் நல்ல சொல்லாக இருக்க வேண்டும். இனிமையான சொற்களே இதயத்தில் நிற்கும். கடும் சொற்கள் நம்மை காணாமல் செய்து விடும். சிந்தித்துப் பேசுவதே சிறப்பு தரும்,'' என்றார்.சண்முக தேவி எழுதிய, 'பாரதி வரியும், பாவையர் வாழ்வும்,' என்னும் நுாலை புலவர் தங்கமணி வெளியிட்டார். உதவி பேராசிரியர் கணேசன் நுால் அறிமுக உரை நிகழ்த்தினார்.பெரிய புராணத்தில் இடம் பெற்ற பெண் புலவர்கள் குறித்த கவியரங்கம் நடந்தது. கண்ணதாசன் மற்றும் வாலி குறித்த பட்டிமன்றம் நடந்தது. பேச்சாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
05-Mar-2025