உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்மிகம் என்றாலே சுய ஒழுக்கம் தான்

ஆன்மிகம் என்றாலே சுய ஒழுக்கம் தான்

மேட்டுப்பாளையம், ;மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ மயூரம் அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.நிறுவனர் சரவணன் பேசுகையில், மக்கள் இடையே, கருணையை உருவாக்கும் ஆன்மிக சுய ஒழுக்கத்தை ஏற்படுத்தி, வெற்றியை நோக்கி செல்லக்கூடிய, எண்ணத்தை உருவாக்குவதே எங்களது பணி. ஆன்மிகம் என்றாலே சுயஒழுக்கம் தான்,'' என்றார்.விழாவுக்கு தலைமை வகித்த சிவஸ்ரீ சுந்தரம் சுவாமிகள் பேசுகையில், இளைஞர்களுடன் இணைந்து ஆன்மிக ரீதியாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் ஆன்மிகத்திற்கு ஆர்வமாக வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !