உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டால் உடல் மனம் வலுப்பெறும்

விளையாட்டால் உடல் மனம் வலுப்பெறும்

கோவை:மாதம்பட்டி, விஷ்வன்கர் பப்ளிக் பள்ளியின் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக ஸ்கை ஹை அகாடமி நிறுவனர் மற்றும் தேசிய ரைபிள் ஷூட்டர் கவுதம் லோகநாதன், ஜூனியர் கமிஷனர் அதிகாரி மணிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். விழாவை துவங்கி வைத்த விருந்தினர்கள், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.விளையாட்டின் மூலம் உடல் வலுப்பெறுவதுடன் மனநலனும் மேம்படும் என்றும், ஏதேனும் ஒரு விளையாட்டில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றும், விருந்தினர்கள் அறிவுறுத்தினர்.கண்கவர் அணிவகுப்பு, சிலம்பம், கராத்தே, யோகா போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளை மாணவர்கள் நிகழ்த்தினர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் சங்கீதா, இயக்குனர் கதிர்வேல், தலைமை ஆசிரியை பிருந்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை