கோவை : கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் (ஜி.சி.டி.,) ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள், விரைவில் அமையவுள்ளன. உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின் படி, கோவை, சேலம், பர்கூர் ஆகிய கல்லுாரிகளில் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏ.ஐ.. மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிகளில் ஏ.ஐ., மிஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பிரத்யேகமாக துவங்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் அரசு தொழில்நுட்ப கல்லுாரிகளில் இப்பாடப்பிரிவுகள் பிரத்யேகமாக துவக்கப்படவில்லை. இதுபோன்ற பிரிவுகளும் துவங்க, மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, ஜி.சி.டி., முதல்வர் மனோன்மணியிடம் கேட்டபோது, ''ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகள் அனைத்தும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகளின் துணை பாடங்களே. இதை தனியாக படிக்கவேண்டும் என்ற தேவையில்லை. அரசு கல்லுாரிகளில் மாணவர்கள் அப்பாடங்களையும் ஒரு பிரிவாக படிக்கின்றனர். எங்கள் கல்லுாரியில், அரசு அறிவிப்பின் படி, ஏ.ஐ., ரோபோடிக்ஸ் லேப் அமைக்கப்படவுள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் வரப்பெற்றதும், ஆய்வக உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்,'' என்றார்.