உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு வழங்க மரக்கன்றுகள் இருப்பு

விவசாயிகளுக்கு வழங்க மரக்கன்றுகள் இருப்பு

ஆனைமலை;'மண்ணுயிர் காத்த மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், வேப்ப மரக்கன்றுகள், இயற்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது,' என ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:மண்ணுயிர் காத்த மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தில், கோட்டூர் துணை விரிவாக்க மையத்தில், 2,915 நாட்டு வேப்ப மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.ஆனைமலை வட்டாரத்தில் உள்ள, 19 கிராமத்தை சேர்ந்த இயற்கை ஆர்வல விவசாயிகள், தங்களது நிலங்களின் சுற்றுப்பகுதிகளிலும், காலியிடங்களிலும் நட்டு பராமரிக்க இம்மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.மரக்கன்றுகள் வளர்ப்பதால், நகர கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் வெளியேற்றத்தால் காற்றில் ஏற்படும் நச்சு மாசுக்களின் பாதிப்பை தடுக்கிறது.வேர் அழுகல் பூஞ்சாணம், நுாற்புழுக்களின் பாதிப்பை முற்றிலும் தடுக்கிறது. 20 ரூபாய் மதிப்புள்ள மரக்கன்றுகள், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடி விவசாயிகள் நட்டு பயன்பெறும் வகையில் நில உடமைக்கு ஏற்றவாறு உதவி இயக்குனரால் ஆய்வு செய்யப்பட்டு, குறைந்த அளவிலேயே பட்டியலிடப்பட்டு ரசீதுடன் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !