மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
08-Sep-2024
அன்னூர்;மழைநீர் வடிகால் அமைக்க பொறியாளர்கள் அன்னூரில் ஆய்வு செய்தனர். அன்னூரில், தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில், கடந்த எட்டு மாதங்களாக மழைநீர் மற்றும் அன்னூர் குளத்து நீர் தேங்கியுள்ளது. இதனால் வீடுகள் இடியும் அபாயம் உள்ளது. தோட்டங்களில் பயிர்கள் அழுகிவிட்டன.இதற்கு தீர்வாக தர்மர் கோயில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவொன்யூ பகுதியில் தேங்கும் நீரை கிழக்கே கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதையடுத்து பேரூராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மழைநீர் வடிகால் அமைக்க அனுமதியும் நிதியும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை யடுத்து முதல் கட்டமாக தேங்கும் மழை நீரை கிழக்கே கொண்டு செல்வதற்கு சரிவு எங்கு உள்ளது என்பதை கண்டறிய பேரூராட்சி இளநிலை பொறியாளர் மற்றும் அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.சத்தி ரோட்டில் இருந்து எந்தப் பகுதியில் சரிவு உள்ளது என்பதை சர்வே கருவிகள் கொண்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
08-Sep-2024