மாநில தடகளத்தில் மாணவிக்கு வெள்ளி
பொள்ளாச்சி,; தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. இப்போட்டியானது, 18, 20 மற்றும் 23 வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.இதில், 1,200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதில், ஆனைமலை அருகே உள்ள, காளியாபுரம்பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ரஞ்சிதாவும் பங்கேற்றார்.அவர், 20 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், 10 ஆயிரம் மீட்டர் 'வாக்கத்தான்' போட்டியில், இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரை, பள்ளிச் செயலாளர் சிவக்குமார், இணைச் செயலாளர் நரேந்திரகுமார், தலைமையாசிரியர் சேதுராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் தர்மலிங்கம், அய்யப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.