மேலும் செய்திகள்
கலை விழா
17-Feb-2025
கோவை; யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை, ஜி.கே.எம்., குளோபல் சர்வீசஸ் பிரைவேட் லிட்., நிறுவனம், யுனைடெட் இன்போடெக் பயிற்சி மையம் சார்பில், 'டேலி பிரீமியர் லீக்-2025' தொடரின் முதல் லீக் போட்டி நேற்று நடந்தது.சாய்பாபா காலனியில் உள்ள யுனைடெட் இன்போடெக் மையத்தில் நடந்த போட்டியில், ஜி.கே.எம்., குளோபல் சர்வீசஸ் நிறுவன நிறுவனர் கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார். யுனைடெட் கல்விக் குழும நிறுவனர் சண்முகம் தலைமை வகித்தார். யுனைடெட் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார்.100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முதல் பரிசை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர் அரவிந்த் ரமணன் தட்டினார்.யுனைடெட் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் விஷால், முருகேசன் ஆகியோர் இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசை பஜிருல்லா பாபு, சுகுனேஷ் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாணவன் யுகேஷ் கிருஷ்ணா ஆகிய மூவரும் பெற்றனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
17-Feb-2025