உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நில அளவை துறை சுணக்கம் மேம்பாட்டு பணி முடக்கம்

நில அளவை துறை சுணக்கம் மேம்பாட்டு பணி முடக்கம்

அன்னுார்;நில அளவைத் துறையினர் அளவீடு செய்து தராததால், சாலை மேம்பாட்டு பணி முடங்கி உள்ளது. பொன்னேகவுண்டன்புதுாரில், அரசு உயர்நிலைப்பள்ளி, நுாலகம், கால்நடை மருந்தகம், தொழிற்சாலைகள் உள்ளன. 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.கோவில்பாளையம்--கருவலுார் சாலையில், பொன்னே கவுண்டன்புதுாரில், நால்ரோடு சந்திப்பில், விரிவாக்க பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், சிலர் அந்த சந்திப்பில், நில அளவை செய்த பிறகே, பணிகளை தொடர வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பணி இரண்டு மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, அன்னுார் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், நால்ரோடு சந்திப்பில், நில அளவீடு செய்து தருமாறு அன்னுார் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பி இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்னும் நில அளவைத் துறையினர் நில அளவீடு செய்து தரவில்லை.இதுகுறித்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'நால்ரோடு சந்திப்பில் உள்ள குழிகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை சேதம் அடைந்து உள்ளது. இதனால் விபத்து நடக்கிறது.இங்கு சாலை மேம்பாடு செய்ய அரசு நிதி ஒதுக்கியும், பணி மாதக்கணக்கில் முடங்கி கிடக்கிறது. நில அளவை துறையினர், உடனடியாக நால்ரோடு சந்திப்பில், நில அளவீடு செய்து, எல்லை நிர்ணயித்து தந்தால், முடங்கியுள்ள சாலை மேம்பாட்டு பணி துவங்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ