உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி

இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி

பொள்ளாச்சி : தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பூச்சியியல் துறை வாயிலாக, ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி, வரும் 19ம் தேதி நடக்கிறது.இதில், ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கை பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு குறித்து, முக்கிய அம்சங்களாக விளக்கப்படுகின்றன. பயிற்சியில் கலந்து கொள்வதற்கு, ரூ.900 நேரடியாக, பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ