உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில்நுட்ப ஜவுளி பயிற்சி 150 தொழில்முனைவோர் பயன்

தொழில்நுட்ப ஜவுளி பயிற்சி 150 தொழில்முனைவோர் பயன்

கோவை; தொழில்நுட்ப ஜவுளி குறித்த ஐந்து நாள் பயிற்சி முகாமில், 150 தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர்.அவிநாசி ரோடு, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(சிட்ரா)தொழில்நுட்ப ஜவுளி குறித்த, தொழில்முனைவோருக்கான ஐந்து நாள் பயிற்சி முகாம், நேற்றுமுன்தினம் துவங்கியது. இதில், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சோமனுார் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 150 தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர்.ஐந்து நாள் பயிற்சி முகாமில் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்துறை வல்லுனர்கள் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகள் தெரிவிக்கின்றனர். காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை செய்முறை விளக்கத்துடன், தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ