உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் உள்ள குழிகள் தற்காலிகமாக மூடல் 

ரோட்டில் உள்ள குழிகள் தற்காலிகமாக மூடல் 

பொள்ளாச்சி;சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழிகள், தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வீடுகள் தோறும், சீராக குடிநீர் வினியோகிக்க, புதிதாக 'ஏர்வால்வு' அமைத்து, தண்ணீர் அழுத்தத்துடன் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதேபோல, அவ்வப்போது ஏற்படும் குழாய் உடைப்பு மற்றும் நீர் கசிவும் சரி செய்யப்படுகிறது. இதற்காக, ரோடுகளில் தோண்டப்பட்ட குழிகள், சீரமைக்கப்படாமல் இருந்தது. ரோடுகளை புனரமைக்க காலதாமதம் ஏற்பட்டதால், பள்ளங்களில் இறங்கி ஏறும் வாகனங்கள், விபத்தில் சிக்குகின்றன.இதற்கு, தற்காலிகமாக தீர்வு காணும் வகையில், கட்டடக் கழிவு கொண்டு, குழிகள் மூடப்பட்டு வருகின்றன.மக்கள் கூறுகையில், 'பேரூராட்சிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பதுபோன்று, வாகனங்களின் இயக்கமும் உள்ளது. எனவே, சேதமடைந்த ரோடுகளை புதுப்பிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ