பாஸ்போர்ட் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
கோவை:நாடு முழுக்க உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும் 29 முதல் செப்.,2 வரை, பாஸ்போர்ட் சேவைப்பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.இது குறித்து, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் அறிக்கை:தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடக்கவிருப்பதால், வரும் 29ம் தேதி முதல் வரும் செப்., 2ம் தேதி வரை, பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.பாஸ்போர்ட் சேவா கேந்திரா மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆகியவற்றில் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிக்க, ஆக., 30ல் நேர்காணலுக்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அடுத்த வேலை நாளில் நேர்காணலை மாற்றிக்கொள்ள வேண்டும்.இது தொடர்பாக, பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டுமென்றாலும் விபரங்கள் தேவைப்பட்டாலும், rpo.mea.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இ- மெயில் முகவரியில், தொடர்பு கொள்ளலாம்.வரும், 30ம் தேதியன்று கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரணை மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான பிற சேவைகள் எதுவும் இருக்காது.இவ்வாறு, சதீஷ் கூறியுள்ளார்.