ஆசிட் தொட்டி உடைந்தது
கோவை: கோவை, சுந்தராபுரம் அருகே. ஜி.வி.ஜி., நகரில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஆசிட் விற்பனை குடோன் உள்ளது. இங்கு இன்று அதிகாலை ஆசிட் சேமித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தொட்டியின் மீது சிமெண்ட் சீட் விழுந்ததில் உடைப்பு ஏற்பட்டு ஆசிட் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை அடித்து ஆசிட் தாக்கத்தை குறைத்தனர்.