மாணவர்களின் கை பட்டதும் உயிர் பெற்ற ஆப்பிள் பறவையும், தக்காளி விநாயகரும்!
ஆப்பிள் மற்றும் உருளைக்கிழங்கு விநாயகர், தர்பூசணி கப்பல், ஆப்பிள் பறவை, பீன்ஸ், கேரட் பூச்செடி என, பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் காய்கறி வண்ணமயமானது.கோவை சுங்கம், கார்மல் கார்டன் பள்ளியின், 60வது ஆண்டினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே கலை, இலக்கிய போட்டிகள் நடந்தன25க்கு மேற்பட்ட பள்ளிகளின், 1,100 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள், ஓவியம், மாறுவேடம், கதை கூறுதல், செய்கை பாடல், காய்கறி, பழங்கள் செதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.காய்கறி, பழங்கள் செதுக்குதலில் சிறார்களின் கைகளில், காய்கறிகள் 'உயிர்' பெற்றன. உருளைக்கிழங்கு, தக்காளியில் விநாயகர், ஆப்பிளில் பறவை, தர்பூசணியில் கப்பல் என மாணவர்களின் கற்பனைக்கு எல்லையில்லை. பயனற்ற பொருட்களை கொண்டு, பயனுள்ள பொருட்கள் தயாரித்தலிலும் மாணவர்கள் அசத்தினர். சோப் கொண்டு அலங்கார பொருட்கள், அழைப்பிதழ் தயாரித்தல் என, ஒவ்வொரு போட்டியிலும், 'நாங்க எல்லாம் அப்பவே அப்படி, போட்டின்னு வந்துட்டா சும்மா இருப்போமா' என, திறனை நிரூபித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.