உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளங்களில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் மாநகராட்சி

குளங்களில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் மாநகராட்சி

கோவை;குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம், குமாரசாமி குளம், நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, குறிச்சி குளம் என, 9 குளங்கள் உள்ளன. நீராதாரமாக இருக்கும் இக்குளங்கள் தற்போது, கழிவுநீர் சங்கமிக்கும் இடமாக மாறி வருகிறது.இதனால், நிலத்தடி நீர் பாதிப்பு, நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு என, பல சிக்கல் ஏற்பட்டு வருகின்றன. குளத்தில் கலக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றின் பலன் குறைவாகவே உள்ளது.கழிவு நீரால் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட சிங்காநல்லுார் குளம் உட்பட பெரும்பாலான குளங்கள், ஆகாய தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன.மாநகரின் நீராதாரத்தை அதிகரிக்கச் செய்யும் குளங்கள் அத்தனையும், ஆகாயத்தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன. இதை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியது. நேற்று கோவை குறிச்சி குளத்தில், ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கலெக்டர் கிராந்திகுமார், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் இப்பணியை ஆய்வு செய்தனர்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''புதிய இயந்திரம் ரூ.4 கோடி மதிப்புடையது. ''இதுதவிர, ஊதியம் உள்ளிட்டவை அதிக பொருட் செலவை ஏற்படுத்துவதால் ஒப்பந்த முறையில் ஆகாயத் தாமரை அகற்றப்படுகிறது. ஒன்பது குளங்களிலும் ஆகாயத் தாமரை அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படும். ஒரு மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை