உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரிடர் மீட்புக்குழுவினர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரிடர் மீட்புக்குழுவினர்

வால்பாறை : வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இன்ஸ்பெக்டர் தினேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.மழை காலத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து, மாணவர்கள் மத்தியில் மீட்பு படை வீரர்கள் செயல்விளக்கம் காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ