மேலும் செய்திகள்
வாடகை கார் உரிமையாளர்கள் போலீசில் புகார்
30-Aug-2024
மேட்டுப்பாளையம் சுற்றுலா வாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டுநர் நல சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட சுற்றுலா வாடகை கார் வாகனங்கள் இயங்குகின்றன. சில வாகனங்கள் கோவை, சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வாடகைக்கு எங்கள் பகுதிக்கு வருகின்றன. அவர்கள், பல மணி நேரம் காத்திருந்து, வாடிக்கையாளர்களை மீண்டும் அழைத்து செல்கின்றனர். இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வாடகைக்கு வரும் வாகனங்களால், உள்ளூர் ஓட்டுநர்கள், தனியார் நிறுவன ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டு மனையில் கழிவறை
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி, '2014-ல் எனக்கு மைலேறிபாளையத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை அளிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது பொதுக் கழிப்பிடம் தற்போது கட்டப்பட்டு உள்ளது. இது குறித்து பல முறை மனு அளித்தும், அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை' என கூறி மனு அளித்தார். கணவர் அடித்துக்கொலை
கோவை போளுவாம்பட்டியை சேர்ந்த அனுசியா என்பவர், 'எனது கணவரை மூவர் அடித்து கொலை செய்தனர். நாங்கள் பட்டியல் இன வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பிறந்து, 10 நாட்களான எனது பெண் குழந்தைக்கு உரிய நீதி, நிவாரணம் வழங்க வேண்டும்' என கோரி மனு அளித்தார். சம்பளம் கேட்டால் மிரட்டுவதா!
கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசித்து வரும் காளிமுத்து மற்றும் அவரது ஒன்பது மற்றும் பிளஸ் 1 படிக்கும் மகன்கள் அளித்த மனுவில், 'கணபதி சேர்ந்த குப்புராஜ் என்பவர், நாங்கள் செய்த வேலைக்கு ஊதியம் தரவில்லை. கோவில்பாளையம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தோம். மனு மீதான விசாரணைக்கு எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்த போது, குப்புராஜ் கொலை மிரட்டல் விடுத்தார். எங்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே பிரச்னையை வலியுறுத்தி, கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் இளங்கோவனும் மனு அளித்தார்.
30-Aug-2024