உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பொருட்காட்சி ஞாயிறோடு நிறைவு

அரசு பொருட்காட்சி ஞாயிறோடு நிறைவு

கோவை : அரசுப்பொருட்காட்சி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது; வரும் ஞாயிறு வரை நீட்டிப்பு செய்யப்ட்டுள்ளது.வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மே 25ல் அரசுப் பொருட்காட்சி துவங்கப்பட்டது. இதில், 27 அரசுத்துறை அரங்குகளும், ஏழு அரசு சார்பு நிறுவனங்கள் என, மொத்தம், 34 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்று (12ம் தேதி) பொருட்காட்சி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களான சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு பொருட்காட்சி தொடரும். வரும் 14ம் தேதி ஞாயிறு இரவு நிறைவடையும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்