| ADDED : ஜூலை 22, 2024 01:39 AM
கோவை;இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு சேப்டரின் 39வது மாநில மாநாடு வரும் 27, 28ம் தேதிகளில், கோவை ஜென்னிஸ் கிளப்பில் நடக்கிறது.இந்த மாநில மாநாட்டை கொங்குநாடு மனநல மருத்துவ சங்கம், 'மன நல மருத்துவ துறையின் புதுமைகள்' என்ற தலைப்பில் நடத்தவுள்ளது.இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, சுமார் 800 மனநல மருத்துவர்கள் மற்றும் மன நல முதுகலை பட்டதாரி மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.மாநாட்டின் ஒரு பகுதியாக, பொது மக்களிடம் மன ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் நேற்று மராத்தான் தொடர் ஓட்டம் நடந்தது.நேரு அரங்கில் தொடங்கி மூன்று, ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் பிரிவுகளில் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மராத்தானில் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ரவி, மராத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மன நல சங்கத்தின் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையின் தலைவர் டாக்டர் பிரியா, கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், டாக்டர் வெங்கடேஷ்குமார், டாக்டர் மணி கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர்.