உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனிமாத கடைசி முகூர்த்தம்பத்திரப்பதிவு எண்ணிக்கை உயர்வு

ஆனிமாத கடைசி முகூர்த்தம்பத்திரப்பதிவு எண்ணிக்கை உயர்வு

கோவை:ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் கோவையிலுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கோவையில் இரண்டு இணை சார்பதிவாளர் அலுவலகங்களுடன் சேர்ந்து மொத்தம், 17 துணை சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. நேற்று ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நேற்று அதிக அளவு டோக்கன்களை வழங்க கோவை மண்டல பதிவுத்துறை துணை தலைவர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி வழக்கமாக வழங்கப்படும், 100- டோக்கன்களுக்கு பதில், 150 டோக்கன்களும் 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்க அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி டோக்கன்கள் முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தது. நேற்று கோவையிலுள்ள, 17 சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் ஆர்வத்துடன் பத்திரப்பதிவு மேற்கொண்டனர். இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ