மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
12 hour(s) ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
12 hour(s) ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
12 hour(s) ago
மேட்டுப்பாளையம் : ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவை அகற்றியதை அடுத்து, ஆறு நாட்களுக்குப் பிறகு, மலை ரயில் நேற்று முதல் மீண்டும் ஓடத் துவங்கியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த, 1ம் தேதி குன்னூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், ரயில் பாதையில் அடர்லிக்கும் ஹீல்குரோவுக்கும் இடையே, ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் மண், பாறைகள், மரங்கள் ஆகியவை சரிந்து விழுந்தன. இதனால் 1ம் தேதியிலிருந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையில் உள்ள மண் மற்றும் பாறைகள் முற்றிலும் அகற்றினர். மண் சரிவு காரணமாக கடந்த ஆறு நாட்களாக, ரத்து செய்திருந்த ஊட்டி மலை ரயில், மண் சரிவு, ரயில் பாதை சீர் செய்ததை அடுத்து, நேற்று முதல் மீண்டும் ஓடத் துவங்கியது. மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து, காலை, 7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. இதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago