உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி அணைப்பகுதியில் மழை நீர்மட்டம் 42 அடியாக மெல்ல உயர்வு

சிறுவாணி அணைப்பகுதியில் மழை நீர்மட்டம் 42 அடியாக மெல்ல உயர்வு

கோவை : சிறுவாணி அணைப்பகுதியில் மழைப்பொழிவு இருப்பதால் அணையின் நீர்மட்டம், 42 அடியாக உயர்ந்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக இந்த அணை அமைந்துள்ளது. மாநகராட்சியின், 22 வார்டுகள் மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.அணையின் மொத்த உயரமான, 50 அடியில் நீர் தேக்காமல், பாதுகாப்பு காரணங்களை கூறி கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், 45 அடி மட்டுமே நீரை தேக்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அணையின் நீர்மட்டம், 42 அடியாக இருந்த போது, கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையில், இருந்து, 1,000 கனஅடி நீரை வெளியேற்றினர். மழைப்பொழிவு குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கடந்த இரு தினங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 14 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில், 37 மி.மீ., மழைபொழிவு பதிவானது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 42.54 அடியாக உயர்ந்து. அணையில் இருந்து, 10.50 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர்மட்டம், 42 அடியாக உயர்ந்த நிலையில், கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து நீரை திறந்து விடவில்லை. அணையின் நீர்மட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ