மேலும் செய்திகள்
வாழைத்தார் வரத்து குறைவு; விலையும் சரிவால் வேதனை
14-Feb-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு தினசரி காய்கள் மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்றுமுன்தினம் செவ்வாழை (கிலோ) - 80, நேந்திரன் - 35, பூவன் - 30, கதளி - 45, ரஸ்தாளி - 40, சாம்பிராணி வகை வாழைத்தார் - 45 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை விட தற்போது கதளி - 10, ரஸ்தாளி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் - 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மேலும், நேந்திரன் தார் மட்டும் 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் 40க்கும் குறைவான வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு இருந்தது. இதனால் விலை அதிகரித்தது. மேலும், செவ்வாழை தார் மூன்று மட்டுமே வரத்து இருந்தது. வரும் நாட்களில் வாழைத்தார் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.
14-Feb-2025