ஆலமரத்தம்மன் கோவிலில் வரும் 5ல் திருக்கல்யாணம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆலமரத்தம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வரும்,5ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் ஆலமரத்தம்மன் கோவிலில், கடந்த, 18ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. கடந்த, 25ம் தேதி கணபதி ேஹாமம், கலச அபிேஷகம், கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து, காயங்கருப்பட்டி மாற்றுதல், கொலு தீபம் ஏற்றப்பட்டது. தினமும், இரவு, 7:30 மணிக்கு பூவோடு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.வரும், மார்ச், 3ம் தேதி ஆலமரத்தம்மனுக்கு திருக்கல்யாணம் செய்ய முகூர்த்த கால் நடுதல், அம்மனுடைய நகை பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 4ம் தேதி திருவேங்கடம் நகரில் இருந்து, ஊர் பூவோடு அழைத்து வருதல், பொதுக்கிணற்றில் இருந்து சக்தி கும்பம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 5ம் தேதி ஆலமரத்து அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது.6ம் தேதி கிராம சாந்தி செய்தல், 7ம் தேதி மஞ்சள் நீராடல், மஹா அபிேஷகம், மஹா தீபாராதனை, கொடி கம்பத்தில் இருந்து கொடி இறக்குதல், கொலு தீபம் இறக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.