உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு

சுவாமி கழுத்தில் இருந்த நகை திருட்டு

கோவை; விலின் பூட்டை உடைத்து,சுவாமி கழுத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம், சத்தி ரோட்டில் ஸ்ரீ சிறுவர் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக மணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6ம் தேதி பூஜைகள் முடிந்த பின், மணி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.இரவில் மர்மநபர் கோவில் கதவை உடைத்து, சுவாமி கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றார். மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி மணி, சுவாமி கழுத்தில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது குறித்து, கோவில் நிர்வாகி மருதாச்சலத்திற்கு தெரிவித்தார்.தகவல் அறிந்த அப்பகுதியினர், கோவில் முன் திரண்டனர். மருதாச்சலம் புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி