கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தால் சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும். திஷா ஸ்போர்ட்ஸ் அகாடமி
அத்லெடிக் பயிற்சி வழங்கப்படுகிறது. வயது வரம்பு இல்லை. காலை 6:00 முதல் 9:00 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் பயிற்சி நடைபெறும்.முகவரி: வடக்கலுார், அன்னுார். தொடர்புக்கு: 98941-29296. நியூ லைப் ஸ்போர்ட்ஸ் புட்பால் அகாடமி
கால்பந்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 முதல் 23 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். முகவரி: சக்தி விநாயகர் நகர், வெள்ளலுார். தொடர்புக்கு: 97897-96427. கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி
தடகளம், கையுந்துப்பந்து, கால்பந்து, சதுரங்கம், கேரம், மேஜை பந்து, இறகுப் பந்து, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. முகவரி: ஒத்தக்கால்மண்டபம். தொடர்புக்கு: 98659-13831. ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட்
பி.பி.சி., மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இங்கிலீஷ் உரையாடல் பயிற்சி, ஆக்டிவிட்டி பிராக்டிக்கல் கிராமர் பயிற்சி, டிராயிங், பெயிண்டிங், ஆர்ட் அண்ட் கிராப்ட், போனிக் சவுண்ட்ஸ், ஹேண்ட் ரைட்டிங் ஆகிய பயிற்சிகள் ஆன்லைன், நேரடியாக வழங்கப்படுகின்றன. முகவரி: துடியலூர். தொடர்புக்கு: 93448-11588. கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரி:
ஏப்., 22 முதல் மே 5 வரை கேம்ப் -1, மே 5 முதல் 20 வரை கேம்ப்- 2 என சிலம்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாராந்திர வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. முகவரி: ஜி.என்.மில்ஸ் போஸ்ட். தொடர்புக்கு: 96266-68856, 83000-22271.கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.