உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை பொழிவின்றி அமையாது உழவு

மழை பொழிவின்றி அமையாது உழவு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் பகுதியில் கோடை மழைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் பகுதியில் தக்காளி, தட்டை, சோளம், பருத்தி போன்றவை பயிரிடப்படுகிறது. தற்போது கோடை வெயில் அதிகரிப்பால், பெரும்பாலான நீர்நிலைகளில் நீர்மட்ட அளவு குறைந்துள்ளது. எனவே, அப்பகுதி விவசாயிகள் கோடை மழைக்காக காத்திருக்கின்றனர்.இதுகுறித்து, விவசாயி போகநாதன் கூறுகையில், ''ஒரு ஏக்கர் நிலத்தில் மானாவாரியில் விவசாயம் செய்கிறேன். கடந்த ஆண்டு கோடையில் மழை இருந்ததால், தக்காளி சாகுபடி செய்தேன்.இந்த ஆண்டு கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மழை பெய்தால் மட்டுமே கோடை உழவை துவங்கி விவசாயம் மேற்கொள்ள முடியும். மழை அதிகரித்தால் மானாவாரியில் தட்டை அல்லது சோளம் பயிரிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்