உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு இழைக்கும் அநீதியை மறைக்க முப்பெரும் விழா

கோவைக்கு இழைக்கும் அநீதியை மறைக்க முப்பெரும் விழா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவைக்கு இழைத்துக் கொண்டிருக்கும் அநீதியை மறைக்க, தி.மு.க., முப்பெரும் விழா கொண்டாடுவதாக, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=azucrci5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது:

வெள்ளலூர் குப்பை கிடங்கு, அப்பகுதி மக்களின் வாழ்வை பாதித்ததால், அதை அகற்றக் கோரி, பசுமைத் தீர்ப்பாயத்தில், 2013ல் வழக்கு தொடரப்பட்டது.ஓராண்டுக்குள் வெள்ள லுார் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி, 4 மாதங்களில், 65 குப்பை சுத்திகரிப்பு மையங்களை உருவாக்க, பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2018ல் உத்தரவிட்டது.ஆறு ஆண்டுகளாகியும், அவலம் தொடர்கிறது. 2019 லோக்சபா தேர்தல் வாக்குறுதியில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உத்தரவாதம் அளித்து, தி.மு.க., வெற்றி பெற்றது.2021 சட்டசபைத் தேர்தலிலும் வாக்குறுதி அளித்தது. போகிற போக்கில் அள்ளிவிடுவதுதானே, தி.மு.க.,வின் வழக்கம்.யார் கேட்கப் போகிறார்கள் என்ற, அதீத நம்பிக்கையில் மீண்டும் 2024 லோக்சபா தேர்தலில், கோவைக்கு தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை தி.மு.க., வெளியிட்டது. அதற்கு தலைப்பே, 'ரைசிங் கோவை'. இந்த 49 பக்க அறிக்கையில், 39 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அனைத்துமே, புதிய மொந்தையில் பழைய கள்ளு கதைதான்.மாநில சுயாட்சியும், ஹிந்தி எதிர்ப்பும் எப்படி இன்னும் தொடர்கிறதோ, அதேபோல, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு உட்பட, 39 வாக்குறுதிகளும் மூன்றாண்டு கால ஆட்சியில் இன்னும் தொடர்கின்றன.சாலைகள் சீர்படுத்தப்படவில்லை. இணைப்புச் சாலைகள் எனப் போடப்பட்டவை, இன்னும் துண்டித்தே கிடக்கின்றன. பார்த்தால் தலைசுற்றி மயக்கம் வரும் அளவுக்கு, 39 வாக்குறுதிகளில் கோவையின் வளர்ச்சி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எப்போதும் போல, மக்களை முட்டாளாக நினைக்கும் தி.மு.க., வாக்குறுதி களை நிறைவேற்றுவதற்கான எந்த காலக்கெடுவும் கொடுக்க வில்லை.'செய்வோம்', 'முடிப்போம்', என, முடிவில்லாத சொற்களையே பயன் படுத்தி இருக்கிறது.இப்படி, கோவைக்கு இழைத்துக் கொண்டிருக்கும் அநீதியை மறைக்க, தி.மு.க., முப்பெரும் விழா கொண்டாடுகிறது. மீண்டும் எத்தனை பொய் சொல்லப் போகிறார்கள் எனப் பார்ப்போம்.ஆனால், கோவையில் ஒரு சென்டிமென்ட் தி.மு.க.,வுக்கு உண்டு. 2010ல், உண்மையான உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, இவர்களாக ஒன்று போட்டார்கள். அதுதான் தி.மு.க.,வுக்கு கடைசி மாநாடு. பத்து ஆண்டுகளுக்கு, தலைமைச் செயலகம் பக்கமே செல்ல முடியாமல் போய்விட்டது. இப்போதும் ஒரு மாநாடு போடுகிறார்கள். 2026ல் அப்படி ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் போல். அது தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லதுதானே.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekaran
ஜூன் 16, 2024 15:24

கோவைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்திற்கே துரோகம் செய்வது யார்? பஞ்சாலைகளை மூடி, பனியன் தொழிலை மூடக்கி, சிறு, குறு தொழில்களை மூடும் வேலை செய்தது யார்? எல்லாம் பிஜேபி மத்திய அரசாங்கம் தானே? கோவையில் வாங்கிய அடியை மறைக்க, புது, புது கண்டுபிடிப்புகளில் சேர்ந்துள்ளார்.


Ramamurthy N
ஜூன் 15, 2024 21:19

தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய நகரம் கோவை, ஆனால் ரயில்வே மண்டலத்தை பாலக்காட்டிற்கு மாற்றி கோவையை ஏமாற்றிய மத்திய அரசை ஏன் குறை கூறவில்லை?


venugopal s
ஜூன் 15, 2024 16:51

மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதியை விடவா அதிகம்


ராம்ஜி
ஜூன் 15, 2024 12:30

ஓர் அக்கா எம்.எல்.ஏ வாகி என்னத்தக் கிழிச்சாங்க?சென்னையிலேயே டேரா.


Bala
ஜூன் 15, 2024 11:10

நடுரோட்டில் ஆட்டின் தலையை வெட்டி கொடூரமாக கொன்று அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதில் கோவை மக்கள் கடும் கோவத்தில் இருக்கிறார்கள்.


Mani . V
ஜூன் 15, 2024 09:08

அதுக்குள்ளையும் அவசரப்பட்டா எப்படி? மக்களின் வரிப்பணத்தில் நாடு முழுவதும் ஊழல் பேர்வழிக்கு சிலை வைத்து, முப்பெரும் விழாக்கள் கொண்டாடி கனிமவளங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்து நாட்டை திவாலாக்கும் வரை பொறுத்திருங்கள்.


அரசு
ஜூன் 15, 2024 08:27

கோவையில் தேர்தல் நடந்து முடிந்து பாஜக தோல்வி அடைந்த பிறகும் உங்களது அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.


Svs Yaadum oore
ஜூன் 15, 2024 07:36

மாஞ்சோலை எஸ்டேட்ட்டில் என்ன நடக்குது என்று விடியலுக்கு தெரியுமா?? ... இங்குள்ள ரியல் எஸ்டேட் கங்காணிகளுக்கு கொள்ளை அடிக்க காத்திருப்பு .....மாஞ்சோலை மலையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்த, 7,000 மக்கள் அடுத்து என்ன செய்வது என, புரியாமல் தத்தளித்து வருகின்றனர்.. ..ஐந்து தலைமுறையாக மலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் காலி செய்து வெளியேற சொன்னால் அவர்கள் எங்கு செல்வார்கள்?? ... ஏழை மக்கள் என்றால் விடியலுக்கு கிள்ளு கீரையா?? .


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 05:59

வெற்றி கரமாக வசூல் மெஷினை ஒரு வருடம் உள்ளே வைத்த திராவிட பாரம்பரியத்தை கொண்டாடத்தான் முப்பெரும் விழா...


முக்கிய வீடியோ