உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

பெ.நா.பாளையம் : சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் வேளாண்துறை சார்பில் அட்மா திட்டம் வாயிலாக, பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், அங்கக சான்றிதழ் நடைமுறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.துணை வேளாண் அலுவலர் விஜயகோபால், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கினார். பயிற்சியில், வேளாண் அலுவலர் சாம்ரவேல், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக வேளாண்மையில் சாகுபடி தொழில் நுட்பங்கள், அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடாசலம், பயிர் காப்பீடு, மண்ணில் உள்ள உயிர் அணுக்களை பாதுகாப்பது மற்றும் அங்கக வேளாண்மையின் ஏற்றுமதி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் சிறுதானியங்கள் முக்கியத்துவம், வேளாண் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். மேலும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், மண்வள அட்டை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்க இடுபொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டன. காருண்யா பல்கலை இளங்கலை வேளாண் பயிலும் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு குறித்து விவசாயிகளுக்கு வரைபடம் வாயிலாக விளக்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் சித்ரா, அனுராதா, சையது நூர் முகமது மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை