மேலும் செய்திகள்
குப்பை நிரம்பிய சிவகங்கை தெப்பக்குளம்
03-Mar-2025
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக, தெப்பத்தேர் வைபவம் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது முதல், விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.விழாவின் ஒவ்வொரு நாளும் முக்கியமான நிகழ்வாக அமைவதால், கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரித்து காணப்படும்.அதில், தேரோட்டத்தின் மூன்றாவது நாள் நிறைவடைந்த பின்னர், நள்ளிரவு, பரிவேட்டை நடக்கும். அதன்பின், நள்ளிரவு, பாரம்பரிய முறைப்படி தெப்பத்தேர் வைபவம் நடைபெறும்.தெப்பக்குளத்தில் இருந்த மிதவை தேரில் உள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன், விநாயகர் எழுந்தருளுவர்.பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிதவை தேரில், மேள, தாள இசையுடன் அம்மன் வலம் வரும் காட்சியை ஊர் மக்களே கூடி நின்று கண்டு வழிபடுவர். மொத்தம், ஐந்து சுற்றுகள் தெப்பத்தேர் சுற்றும்.ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் போது, மக்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் அருள்பாலித்த அம்மன், இறுதியாக நீர்வாழ் உயிர்களுக்கும் அருள்பாலிக்கும் வகையில் தெப்பத்தேர் வைபம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.தெப்பக்குளத்தில் புன்னிய நதிநீர்கள் கலந்து இருக்கும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் மக்கள் எந்த துன்பமுமின்றி வாழ அருள் தரும் அம்மன், நீர் நிலைகள் செழிப்பாக இருக்கும்; எந்த பிரச்னையும் நீர் நிலைகளுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த வைபவம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் இந்த பாரம்பரிய தெப்பத்தேர் வைபவம் பல உண்மைகளை உணர்த்துகிறது. காலப்போக்கில், பராமரிப்பின்றி இருந்த தெப்பக்குளத்தில் கழிவுகள் நிறைந்து காணப்பட்டதால், கோவில் வளாகத்திலேயே தெப்பத்தேர் விடப்பட்டது.அதன்பின், பல தரப்பினரும் எடுத்த முயற்சியால், தெப்பக்குளம் துார்வாரப்பட்டது. அப்போது, தெப்பக்குளத்தில் பல இடங்களில் இருந்தும் ஊற்று பெருக்கெடுத்தது. கழிவுகள் நிறைந்து காணப்பட்ட தெப்பக்குளம், தெளிவான நீரால் நிரம்பியது. அன்னையின் அருள் பெருக, தெப்பக்குளத்திலேயே தெப்பத்தேர் வைபவம் நடத்துவது தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.
03-Mar-2025