கோனியம்மன் கோவில் தேரோட்டம்; நாளை போக்குவரத்து மாற்றம்
கோவை; கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி, கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகரில் உள்ள கோனியம்மன் கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு, நாளை (மார்ச் 5) மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:n பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள், செல்வபுரம், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம்.n வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு வழியாக, பேரூர் ரோட்டை அடையலாம்.n மருதமலை ரோடு, தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது. மாற்றாக, காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.n உக்கடத்திலிருந்து, ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம் வழியாக தடாகம் சாலையை அடையலாம்.n சுக்கிரவார்பேட்டையில் இருந்து, தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.n கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், நாளை (மார்ச் 5) காலை 8:00 முதல் இரவு 10:00 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.n தேர் திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதி ஆகிய சாலைகளில், எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட்டாசு, வெடிகள் கூடாது
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், ராஜவீதி மாநகராட்சி வாகனத்தை நிறுத்தி மடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், கோனியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள கார் பார்க்கிங் மற்றும் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலி இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம். தேர் செல்லும்போது பட்டாசு மற்றும் வெடிகள் பயன்படுத்தவோ, வெடிக்கவோ கூடாது.