உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதை நேர்த்தி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி

விதை நேர்த்தி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி

சூலுார்,; விதை நேர்த்தி செய்வது குறித்து வடவள்ளியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மக்காச்சோளம் பரவலாக பயிரிடப்படுகிறது. கடந்தாண்டை விட கூடுதல் விலை கிடைத்ததால், சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு விதை நேர்த்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.சுல்தான்பேட்டை வட்டார வேளாண் துறையின், அட்மா திட்டத்தின் கீழ் வடவள்ளியில் மக்காச்சோள சாகுபடியில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் வடவள்ளியில் நடந்தது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் தலைமை வகித்தார்.வேளாண் துணை இயக்குனர் புனிதா (மத்திய திட்டம்), ஓய்வு பெற்ற இணை இயக்குனர் டாம் சைலஸ் ஆகியோர் விதை நேர்த்தி செய்வது குறித்தும், நோய் மேலாண்மை குறித்தும் விளக்கினர். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் தியாகராஜன், துறை வாயிலாக வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.வேளாண் அலுவலர் குருசாமி, உதவி அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை