மேலும் செய்திகள்
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
13 hour(s) ago
இளநீர் விலையில் மாற்றமில்லை
13 hour(s) ago
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
13 hour(s) ago
யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு
13 hour(s) ago
கோவை:லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை விபரங்களை, ஓட்டுச்சாவடி வாரியாக, தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய, அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4ல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இத்தேர்தலில் 'என்கோர்' என்கிற மென்பொருளை, தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. இணையத்தில் பதிவேற்றம் செய்யும் தகவல்களை உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். தற்போது ஓட்டுச்சாவடி வாரியாக ஓட்டு எண்ணிக்கை விபரங்களை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதுதொடர்பான பயிற்சி, ஆன்லைனில் 'கூகுள் மீட்டிங்' முறையில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பணிபுரிவோர் பங்கேற்றனர்.ஆறு சட்டசபை தொகுதி நிலவரங்களையும் பெற்ற பிறகே, ஒவ்வொரு சுற்று வாரியான ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி, இணையத்தில் பதிவேற்றம் செய்து, அறிவிக்க வேண்டும்.ஏதேனும் ஒரு ஓட்டுச்சாவடி இயந்திரத்தில் எண்ணுவதற்கு இடையூறு இருப்பின், அதை மட்டும் நிறுத்தி வைத்து விட்டு, அடுத்த சுற்று நிலவரங்களை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago