உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

அன்னுார்;அன்னுார் தாசில்தார் நித்தில வள்ளி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அன்னுார் தாலுகா தாசில்தார் நித்தில வள்ளி, சூலுார் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனித் தாசில்தார் ஜெயபால், அன்னுார் தாலுகா தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், கோவை நகர உதவி பங்கீட்டு அலுவலராக சரகம் ஒன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த சாந்தாமணி, கோவை வடக்கு தாலுகா நிலவரித் திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.வால்பாறை தாசில்தார் வாசுதேவன் மேட்டுப்பாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கோவை கலெக்டர் கிராந்தி குமார் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ