சிறுவர்கள் இருவர் விபத்தில் மரணம்
கோவை: நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, பைக்கில் சென்ற இரண்டு சிறுவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி, 40; மகன் லோகேஷ், 17. இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் தங்கியிருந்து, பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று, லோகேஷின் நண்பர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு, அண்ணன் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள, தனது நணபர் பிரசன்னாவையும், 15 ஏற்றிக்கொண்டார். பைக் விளாங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த கார் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.