மேலும் செய்திகள்
கூடைப்பந்து போட்டிக்கான மாவட்ட அணி தேர்
02-Mar-2025
கோவை : உலக கராத்தே வீரர்கள் தரவரிசையில், கோவையை சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.உலக கராத்தே யூத் லீக் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அங்கமான புஜாராவில் நான்கு நாட்கள் நடந்தது. இதில், 86 நாடுகளை சேர்ந்த, 2,032 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருந்து, 82 வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணி பங்கேற்றது.உலக தரவரிசையை நிர்ணயிக்கும் இப்போட்டியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் அசத்தல் திறமையை வெளிப்படுத்தினர்.21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விக்ரம், 14, 15 வயதுக்குட்பட்ட போட்டியில் ரோகன், 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மிதுன் மோகன்தாஸ், பெண்கள் பிரிவில் ஷாஷா சத்புருஷ் ஆகியோர் பங்கேற்றனர்.இதில் நான்காவது சுற்று வரை சென்ற, ஷாஷா சத்புருஷ் எகிப்து நாட்டு வீராங்கனையுடன், 1-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து, உலக கராத்தே வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்தை பிடித்தார். மிதுன் மோகன்தாஸ் நான்கு சுற்றுகள் வெற்றி பெற்றார்.தொடர்ந்து, வெண்கல பதக்கத்திற்கான சுற்றில், 2-1 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபியா வீரருடன் தோல்வியை சந்தித்து, தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறினார்.வெற்றிபெற்ற வீரர்களுக்கு, கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
02-Mar-2025