உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்

இரண்டு நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்கம்

கோவை:தேர்தலன்று ஓட்டுப்போடுவதற்கு, வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, நாளையும் (17ம் தேதி), நாளை மறுதினமும் (18ம் தேதி) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்குகிறது.வரும், 19ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. கோவையில் தொழில் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், தேர்தல் சமயங்களில் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டளித்து விட்டு, திரும்பி வருவர்.இதுபோன்ற வாக்காளர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் வழக்கமான பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிட்டுள்ளது.நாளை (17ம் தேதி), நாளை மறுதினம் (18ம் தேதி) காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 120 டிரிப்புகள், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 200 டிரிப்புகள் கூடுதலாக இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி