உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் இருவர் காயம்

வாகன விபத்தில் இருவர் காயம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடந்த வாகன விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கிணத்துக்கடவைச்சேர்ந்தவர்கள் முருகன், 53 மற்றும் இளங்கோ, 52. இருவரும் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.இதில், கிணத்துக்கடவு அடுத்துள்ள 'யூ டர்ன்' திசையில் திரும்பும் போது, அகில் என்பவரது கேரளா பதிவு எண் கொண்ட கார் வந்து மோதி விபத்து நடந்தது.இதில், பைக்கில் சென்ற இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி