உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பலன் அளிக்காத முகப்பரு சிகிச்சை: பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

பலன் அளிக்காத முகப்பரு சிகிச்சை: பெண்ணுக்கு இழப்பீடு தர உத்தரவு

கோவை;முகப்பரு சிகிச்சை பலன் அளிக்காததால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, காந்திபுரம், மத்திய சிறை பகுதியில் வசித்து வருபவர் ஆனி ஸ்வேதா. இவருக்கு முகப்பரு பிரச்னை இருந்த நிலையில், ஆர்.எஸ்.புரத்திலுள்ள 'பிரபாஸ் விகேர் ெஹல்த் கிளினிக்' சென்றார். முதற்கட்டமாக, 2022, அக்., 6 ல், 7,000 ரூபாய் செலுத்தி சிகிச்சை பெற்றார். ஆனால், ஆனி ஸ்வேதா முகத்தில் பருக்கள் அதிகரித்தது. அதன்பிறகு, ஐந்து முறை சிகிச்சை பெற்றும் பலனில்லை. சிகிச்சைக்கு மொத்தம், 97,446 ரூபாய் கட்டணம் செலுத்தினார். ஆனால், சிகிச்சைக்கு பிறகு முகப்பரு அதிகமாகி விட்டது.இதனால் மன உளைச்சல் அடைந்த ஸ்வேதா, கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, 30,000 ரூபாய் மட்டும் தருவதாக தெரிவித்தனர். இதனால், பாதிக்கப்பட்ட அவர், இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு: எதிர்மனுதாரரின் சேவை குறைபாட்டால், மனுதாரருக்கு ஏற்பட்ட மனு உளைச்சலுக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய் வழங்குவதோடு,சிகிச்சை பெற்ற கட்டணத்தில், 72,237 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும். செலவு தொகை 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். .......


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை